திருப்பூர் ஸ்மார்ட் சிட்டியில் ஒண்ணாவது மண்டலம் மாநகராட்சி ரோடு தான் இது.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் சாக்கடை பணிகள், கட்டண குடிநீர் குழாய் பதிப்பு பணிகளை செய்துவிட்டு மாத கணக்கில் இது போன்று குழிகளை மூடாமல் சாக்கடை கழிவுநீர், குடிநீர் குழாய் உடைப்பு என மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்குகின்றார்கள் இந்த ரோடு திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் அனுப்பர்பாளையம் புதூர் சந்தை அருகில் அவிநாசி ரோடு அங்கேரிபாளையம் இணைப்பு சாலையாகும் குழிக்குள் காய்ந்து போன மரக்கிளையை நட்டு வைத்துள்ளார்கள். ஒன்றாவது மண்டல மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் எந்த வேலைகளும் நடைபெறுவது இல்லை செய்த வேலை சரிவர செய்தார்களா என்று கண்காணிப்பதும் இல்லை என்ற குற்றச்சாட்டுஉண்மையாகிறது.மேலும் சேதப்படுத்திய ரோடுகளை வேலைகளை முடித்துவிட்டு தனியார் நிறுவனம் தார் சாலைக்கு தார் ரோடும் காங்கிரீட் சாலைக்கு காங்கிரீட் ரோடு போடுவதில்லை இதை அதிகாரிகளும் கண்டு கொள்வதும் இல்லை. உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாகும் .
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment