இந்து மக்கள் கட்சி ஒட்டிய போஸ்டர் தாராபுரத்தில் பரபரப்பு திமுகவினர் காவல் நிலையத்தில் புகார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக நகர மன்ற தலைவர் 2 கோடி ஊழல் அமராவதி பாசனம் வயல் நிலங்களை பணத்துக்காக மனை பிரிவுகளாக வகைப்பாடு மாற்றி கூறு போடத் துடிக்கும் திமுக நகரமன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்களை கண்டிக்கிறோம்
தமிழ்நாட்டை வெள்ளைக்கடாக ஆக்கியது பற்றாதா தாராபுரத்தையும் வெள்ளக்கடாக மாற்ற துடிக்கும் திமுக நகர மன்ற நிர்வாகத்தை கண்டித்து டிசம்பர் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நகராட்சி அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என போஸ்டர் அடித்து தாராபுரம் நகர் முழுவதும் ஓட்டி உள்ளனர் இதனை பார்த்த திமுக நகரமன்ற உறுப்பினர்கள் கொதிப்படைந்து பொய்யான தகவலை பரப்பி வரும் இந்துமக்கள்கட்சி நிர்வாகிகள் மீது தாராபுரம் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.
No comments:
Post a Comment