திருப்பூரில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருப்பூர் மாநகராட்சி, காயத்ரி மஹாலில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு பெ சாமிநாதன், மாண்புமிகு அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., மரியாதைக்குரிய மேயர் ந . தினேஷ்குமார் , திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் , தெற்கு மாவட்ட தலைவர் ரா.ஜெயராமகிருஷ்ணன்,15வேலம்பாளையம் பகுதி செயலாளர் கொ.ராமதாஸ் , சிவபாலன் மற்றும் அதிகாரிகளுடன் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment