முதல்வரின் பொங்கல் பரிசுகளை திருப்பூர் மாநகராட்சி 10வது வார்டு கவுன்சிலர் பிரேமலதா கோட்டாபாலு வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ 1000 ரூபாய், பச்சரிசி , சர்க்கரை , கரும்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி 10 வது வார்டுக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் வீதி காயத்ரி நகரில் உள்ள ரேஷன் கடை எண் -111-ல் பொங்கல் பரிசு திட்டம் 2024-ன் கீழ் 1000 ரூபாய் , பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ,முழுகரும்பு ஒன்று போன்ற பரிசு பொருட்களை 10 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி பிரேமலதா கோட்டா பாலு அவர்கள்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 10 வது வார்டு செயலாளர் சசிகுமார், பகுதி கழக துணை செயலாளர் மணிமாறன், மனோகரன், நாகராஜ் ரமேஷ், பாலு, s.ஆனந்த், விஜி, ரஞ்சித், பவுன், ரகுபதி, அய்யாசாமி, பிரகாஷ், ஆறுமுகம், ஆறுச்சாமி மற்றும் திமுக நிர்வாகிகளும் , உடன்பிறப்புகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment