உடுமலை நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைத்து எல்லையை விரிவாக்கம் செய்ய தீர்மானம் !
உடுமலை நகராட்சியின் சிறப்புக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் மு.மத்தீன் தலைமையில் நடை பெற்றது. இதில் உடுமலை நகராட்சியை ஒட்டி அமைந்துள்ள ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதாவது கணக்கம்பாளையம், பெரிய கோட்டை, , குறுஞ்சேரி, சின்னவீரம்பட்டி, கண்ணமநாயக்கனூர், 1,2, ராகல்பாவி, கணபதிபாளையம் , பூலாங்கிணறு, குரல்குட்டை , புக்குளம், கோட்டமங்கலம், பொன்னரி ஆகிய 13 ஊராட்சிகளை இணைக்க சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் திமுக நகர்மன்ற உறுப்பினர் சி.வேலுச்சாமி தொட்டம்பட்டி ஊராட்சியையும்,திமுக நகர்மன்ற உறுப்பினர் எம்.ஏ.கே. ஆசாத் வடபூதனம் ஊராட்சியையும் தீர்மானத்தில் இணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதன்படி மொத்தம் 15 ஊராட்சி களை நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என தீர்மானம் ஒரு மன தாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தமிழக அரசுக்கும், துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment