திருப்பூரில் நியூஸ் 7 தமிழ் டிவி செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் சேர்ந்த நியூஸ் 7 தமிழ் செய்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசபிரபு மீது மர்ம கும்ப கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு முன்பாக மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாக நிருபர் நேச பிரபு நான்கு மணி நேரத்திற்கு முன்பே காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார் காவல்துறைக்கு அவசர உதவி எண் 100 மூலம் அவர் தொடர்ந்து அழைத்துள்ளதாகவும் இதற்கு பதில் அளித்த காவலர் ஒருவர் ஸ்டேஷனில் ஆள் இல்லை பாதுகாப்பான இடத்தில் இருக்கவும் என்று கூறுகிறார் அதற்குள் நேசபிரபுவை தாக்குவதற்கு மர்மநபர்கள் அருகில் வந்து தாக்குதல் நடத்தினர் என்று கூறப்படுகிறது .உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது என்று பத்திரிக்கையாளர்கள்
அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment