திருப்பூர் பல்லடத்தில் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதலை கண்டித்து கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கண்டனம் .
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தமிழ் ரிப்போட்டர் நேச பிரபு மர்மம் நபர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளானார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடுஞ்செயலை கண்டித்து கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் மகிஷா ரமேஷ் குமார் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்
அவர் விடுத்துள்ள அறிக்கையில் உண்மை நிலவரத்தை உரக்க குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்களுக்கு தகுந்த முறையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் இதுபோல் இனி எந்த ஒரு அசம்பாவிதம் நடக்க கூடாது என்று. நமது கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். குற்றவாளிகளை கைது செய்து அவர்களை வெகுவாக தண்டிக்க வேண்டும் என்று காவல் துறையினரை நமது கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment