திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மற்றும் விவசாய அணி, மகளிர் அணி சார்பில் பொங்கல் கொண்டாட்டம் !
தமிழர் திருநாளை சமத்துவ பொங்கல் திருவிழாவாக கொண்டாடிடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி, திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.கழகத்தின் சார்பில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு சமத்துவ பொங்கல் திருநாளை கொண்டாடிய நிகழ்வில்
திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க. செல்வராஜ் எம்எல்ஏ, அவர்கள் தலைமையில் திருப்பூர் வடக்கு மாவட்ட விவசாய அணி சார்பாகவும், மகளிர் அணி சார்பாகவும் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் தொமுச மாநில துணை செயலாளரும், தெற்கு மாநகர செயலாளரும் டி.கே.டி.மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளரும் , மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் மற்றும் விவசாய அணி சார்பாக மாவட்ட விவசாய அணி செயலாளரும்,14 வது வட்ட செயலாளருமான மு.ரத்தினசாமி மற்றும் நிர்வாகிகள்,ஒன்றிய, பகுதி, வட்டக் கழக செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் .
மகிழ்ச்சி பொங்க, தமிழர் திருநாளை கொண்டாடிடுவோம்! என்று அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை வடக்கு மாவட்ட விவசாய அணி செயலாளரும்,14 வது வட்ட கழக செயலாளருமான மு.ரத்தனசாமி அவர்களும் திமுக நிர்வாகிகளும் தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment