தமிழர் திருநாளை சமத்துவ பொங்கல் திருவிழாவாக கொண்டாடுகின்ற வகையில் தமிழ்நாடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்கள் ஆயிரம் ரூபாய், பச்சரிசி, சக்கரை, கரும்பு போன்ற பொருட்களை வழங்கப்பட்டது. இதில் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டலம் அனுப்பர்பாளையம் ஆத்துப்பாளையம் ரோட்டில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு திட்டம் 2024-ன் கீழ் 1000 ரூபாய்,பச்சரிசி ஒரு கிலோ ,சர்க்கரை ஒரு கிலோ ,
முழு கரும்பு ஒன்று போன்ற பொருட்களை 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் மணிமாறன் அவர்கள் குடும்ப அட்டை தாரர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வில் வார்டு பிரதிநிதி செந்தில் குமார்,துணை செயலாளர் கணேசன், பகுதி அணி நிர்வாகி பக்கிரிசாமி , வார்டு துணை செயலாளர் வனிதா,திமுக மூத்த நிர்வாகி சதாசிவம், பொருளாளர் ரமேஷ், மீனவரணி நிர்வாகி ஆறுச்சாமி மற்றும் திமுக நிர்வாகிகளும் , உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன்
No comments:
Post a Comment