திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகம் பொதுமக்களை கடித்து துன்புறுத்துகிறது.
திருப்பூர் மாநகராட்சி ஒன்னாவது மண்டலம் பதிநான்காவது வார்டு கல்யாணசுந்தரம் வீதியில் குட்டி போட்ட வெள்ளை நாய் இங்குள்ள அனைவரையும் துரத்தி கடிக்க வருகிறது நான்கு பேரை கடித்து உள்ளது நாய் கடித்தவுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டு கொண்டு வந்துள்ளனர். இந்த பகுதியின் அருகில் பள்ளிக்கூடம் இருப்பதால் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போதும் வரும் போதும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது . இந்த நாயை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மாநகராட்சி பகுதிகளில் கும்பல் கும்பலாக நாய்கள் திரிவது பொதுமக்களை ஒருவித அச்சத்திற்கு உள்ளாகிறது இது பற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment