ஏழ்மையான பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் வழங்கியது.
திருப்பூரில் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் ஏழ்மையான பள்ளி மாணவர் மாணவிகளுக்கு கல்வித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகளும் ஏழை எளிய மக்களுக்கும் வயதானவர்களுக்கு உணவு மற்றும் உடை, மருத்துவ உதவி ,பேரிடர் காலங்களில் நிவாரண பொருட்கள் வழங்குவது என்று தனது சமூக சேவை பணிகளை பெருமளவில் விரிவுபடுத்தி தொடர்ந்து செய்து வருகிறது . அந்த வகையில் திருப்பூரில் வறுமை கோட்டிற்கு கீ்ழ் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் கல்வி கட்டணம் செலுத்தாமல் தேர்வு எழுத சொல்ல முடியாத தவித்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவர் மாணவியர்களுக்கு சமூக சேவகர் இந்திராசுந்தரம் அவர்கள் தனது இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக கல்வி கட்டணம் ரூபாய் 65,000 உதவி தொகையை வழங்கினார்கள் . உடன் நிர்வாகிகள் இருந்தனர். காசோலையை வாங்கிய இந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கண்ணீருடன் சமூக சேவகர் இந்திரா சுந்தரம் அவர்களுக்கும் மற்றும் நிர்வாகிகளுக்கும் நன்றி கூறினர் .
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment