தாராபுரத்தில் பல்லடம் செய்தியாளருக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: பல்லடத்தில் நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாராபுரம் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் சார்பில் அண்ணா சிலை முன்பு காவல்துறையினரை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது: - செய்தியாளர் நேச பிரபு மருத்துவச் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்திட வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட காவல் துறை அதிகாரிகளை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும். கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட மர்ம கும்பலில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும். அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தாராபுரம். குண்டடம். மூலனூர். திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் பத்திரிக்கை செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment