அவினாசியில் விவசாய தொழிலாளர்கள் மற்றும் நூறு நாள் வேலை தொழிலாளர்களின் பெருந்திரல் கவன‌ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 January 2024

அவினாசியில் விவசாய தொழிலாளர்கள் மற்றும் நூறு நாள் வேலை தொழிலாளர்களின் பெருந்திரல் கவன‌ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


அவினாசியில் விவசாய தொழிலாளர்கள் மற்றும் நூறு நாள் வேலை தொழிலாளர்களின் பெருந்திரல் கவன‌ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். 



தமிழ் மாநில விவசாய தொழிலாளர்  சங்கத்தின் சார்பில் தமிழக முழுவதும் அனைத்து கிராமங்களிலும் பணி புரியும் நூறு நாள் வேலை தொழிலாளர்களுக்கு கடந்த எட்டு வாரங்களாக சம்பளம் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்தும் ,



மத்திய அரசு உடனடியாக நூறு நாள் வேலை தொழிலாளர்களின் சம்பளத்திற்கு நிதியினை ஒதுக்க வேண்டும் ,தமிழக‌ அரசு பயனற்ற உழவர் பாதுகாப்பு திட்டத்தை கைவிடக் கோரியும் , தமிழக அரசு கலைஞர் வழங்கிய விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைத்திட கோரியும் திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ,

 


தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் வி.கோபால் தலைமையில் அவிநாசி ஒன்றிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ திருப்பூர் புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் எம்.மோகன், சிபிஐ மாவட்ட நிர்வாக குழு எ.ஜி.சண்முகம், சிபிஐ அவிநாசி ஒன்றிய செயலாளர் இரா.முத்துசாமி , த. மா. வி‌. தொ.ச அவிநாசி ஒன்றிய செயலாளர் எ. எல்.ராமச்சந்திரன், மற்றும் வி.கே. சுப்பிரமணியம், ஆர் ஷாஜகான், என் செல்வராஜ் ,கே. கருப்புசாமி, பி. பத்ரன், என். காளியப்பன் , ஆர். மணிகண்டன், எம். நிவேதா, சித்ரா உள்ளிட்டோர் மற்றும் விவசாயிகள் ,நூறு நாள் வேலை தொழிலாளர்கள் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு  விவசாயிகளின் கோரிக்கைகளையும், நூறு நாள் தொழிலாளர்களின்  கோரிக்கைகளையும் கோஷங்களாக எழுப்பினர்.



மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad