எழுபத்தி ஐந்தாவது குடியரசு தினத்தை அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 January 2024

எழுபத்தி ஐந்தாவது குடியரசு தினத்தை அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் கொண்டாடப்பட்டது.

 


எழுபத்தி ஐந்தாவது குடியரசு தினத்தை அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் கொண்டாடப்பட்டது. 



இந்திய திருநாட்டின் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணி அவர்கள் தலைமையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் நடப்பட்ட மூவர்ண  கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்யப்பட்டது இந்த நிகழ்வில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கத்தின் மாநில, மாவட்ட ,மாநகர, அணி நிர்வாகிகளும் ,மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பிறகு நிர்வாகிகள் தொழிலாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது சங்க தலைவருடன் அமர்ந்து அனைவரும் உணவு அருந்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad