பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம், மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மூலனூர் - இரகம்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து தாராபுரம் அண்ணா சிலை அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கம் மாவட்டத் தலைவர் பவித்ராதேவி தலைமை வகித்தார். ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிறுவனர் பௌத்தன் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் சந்தானகோபால். மாவட்ட செயலாளர் சி. கே. கனகராஜ். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு அவரது சொந்த ஊரில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி குடியிருக்க வீடு கட்டி தர வேண்டும் எனவும், சிறுமியின் படிப்பு செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்க வேண்டும். சிறுமிக்கு 10 லட்சம் நிதி உதவி தமிழக அரசு வழங்க வேண்டும். மேலும் சிறுமியின் பெற்றோர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டம் உடனடியாக போட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர். திராவிட கழகத்தினர். தமிழ் புலிகள் கட்சியினர். உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment