தாராபுரம் விவேகம் மேல்நிலைப்பள்ளியில், விளையாட்டு ஆண்டு விழா!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் விவேகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு 2023-2024 ஆண்டு விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவானது இறைவணக்கப்பாடல் மற்றும் வரவேற்பு நடனத்துடன் இனிதே துவங்கியது. விவேகம் பள்ளி குழுமத்தின் தாளாளர் முனைவர் ஆர். சுப்பிரமணியன்
தலைமையேற்று வரவேற்புரை நல்கினார்.
சிறப்பு விருந்தினராகத் எம். கலையரசன் காவல் துணைக் கண்காணிப்பாளர், தாராபுரம் இவ்விழாவில் கலந்து கொண்டு, கொடியேற்றித் துவக்கி வைத்து, பின் மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, மாணாக்கர்களுக்கு உயர்ந்த எண்ணங்களும் விடாமுயற்சியுமே வெற்றிக்கு வழி வகுக்கும் என்ற சிந்தனை கருத்துகளோடு சிறப்புரையாற்றினார்.
வன காவல்துறை அதிகாரி, சுப்புராஜ் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவித்துச் சிறப்புரையாற்றினார்
மாணவிகள், தமிழரின் பாரம்பரிய நடனங்களான நாட்டுப்புற நடனங்களையும் மற்றும் மேலை நாட்டு நடனம்,
உடற்பயிற்சி நடனம் போன்ற பல்வேறு நடனங்களால் பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.
இவ்விழாவில் விவேகம் பள்ளிகளின் செயலாளர்
முனைவர் கே. பூபதி மற்றும் நிர்வாக இயக்குநர்கள் கலந்து கொண்டு இவ்விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தனர். இவ்விழாவை
விவேகம் பள்ளியின் தலைமை ஆசிரியை. உமா மகேஸ்வரி விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். இசைக்குழு மாணவிகளால்
நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment