திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டு புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளை கவுன்சிலர் பிரேமலதா கோட்டா பாலு ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் , தனியார் கட்டண குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் பல வருடங்களாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதனால் மாநகராட்சி ரோடுகள் குண்டும், குழியமாக உள்ள நிலையில் மாநகராட்சி நிர்வாகம் இந்த ரோடுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது . அந்த வகையில் தற்போது மாநகராட்சி ஒன்னாவது மண்டலம் பத்தாவது வார்டு பகுதியில் கவுன்சிலர் திருமதி பிரேமலதா கோட்டா பாலு அவர்கள் ரோடுகள் , குடிநீர், சாக்கடை பணிகளை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்த வார்டுக்கு உட்பட்ட சூர்யா நகர் பகுதியில் எஸ் எப் சி 2022 - 23 திட்டத்தின் கீழ் ரூ.19.82 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த பணிகளை பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பணிகளை பார்வையிட்டார்.
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment