திருப்பூர் மாநகராட்சி 25 வது வார்டு கங்கா நகரில் பிரமாண்டமான மரம் கீழே விழும் நிலையில் உள்ளது .
திருப்பூர் மாநகராட்சி ஒன்னாவது மண்டலம் 25வது வார்டுக்கு உட்பட்ட பங்களா ஸ்டாப் அருகில் உள்ள கங்கா நகர் ஒன்றாவது வீதியில் பெரிய மரம் கிளைகள் முறிந்த நிலையில் உள்ளது. இந்தப் பகுதியில் பார்சல் சர்வீஸ் கம்பெனிகள் அதிக அளவில் உள்ளதால் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த பகுதியில் மரம் முறிந்தது பற்றி விசாரித்த பொழுது கனரக வாகனம் மோதி மரக்கிளை முறிந்தாகவும் மரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது எப்போது வேண்டுமானாலும் மரம் கீழே விழும் வாய்ப்புள்ளது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட இருசக்கர வாகனத்தில் செல்ல அச்சப்படும் நிலை உள்ளது மரம் சாய்ந்து விபத்து ஏற்படும் முன் மரத்தை அப்புறப்படுத்திட வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் வணிகர்களின் கோரிக்கையாக உள்ளது.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment