திருப்பூர் மாநகராட்சி கங்கா நகரில் பெரிய மரம் மக்கள் உயிரை பழிவாங்க காத்திருக்கிறது புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள்
திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் 25 வது வார்டு கங்கா நகர் பகுதியில் லாரி மோதி மரக்கிளை உடைந்ததால் வலுவிழந்த மரம் எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகனம் மற்றும் பொதுமக்கள் மீது விழுந்தால் மிகவும் மோசமான ஒரு விபத்து ஏற்படும் நிலை உள்ளது இது பற்றி 4-1-2024 தேதியில் திருப்பூர் மாநகராட்சி புகார் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் சமூக ஆர்வலர் புகார் செய்துள்ள நிலையில் (புகார் எண்15359)இதனால் வரை அதை அப்புறப்படுத்தவில்லை என்பதை சமூக ஆர்வலரின் குற்றச்சாட்டாகும் இதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் இதற்குண்டான நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது மேலும் மாநகராட்சி புகார் எண்ணுக்கு பலமுறை புகார் செய்தாலும் அதை சரி செய்வதில்லை என்பதை பெரும் குற்றச்சாட்டாக உள்ளது அதிகாரிகள் பல இடங்களில் சரி செய்துள்ளதாக பொய் சொல்லி புகாரை முடிக்கின்றனர் திருப்பூர் மாநகராட்சி புகார் எண்ணில் புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் அறிவுறுத்த வேண்டும் மீண்டும் இந்த திட்டம் நல்ல முறையில் செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றார்கள் மேயர் அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?
No comments:
Post a Comment