புதிய தெற்கு காவல் துணை ஆணையருக்கு கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பூர் தெற்கு காவல் துணை ஆணையராக நாகராஜன் அவர்கள் பதவியேற்றதை முன்னிட்டு கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மகிஷா ரமேஷ் குமார் நிர்வாகிகளுடன் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து நினைவு பரிசு வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் ராஜன் , இளைஞர் அணி தலைவர் வெங்காயம் மணி , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபி, மாவட்ட ஆலோசகர் சரவணன், கேமரா மேன் பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர் மேலும் திருப்பூர் தெற்கு மாவட்டம் உட்பட்ட பகுதிகளில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் எங்கும் கிடைக்காத அளவில் தடுக்க வேண்டும் எனவும் போதை இல்லாத திருப்பூர் மாவட்டம் என பெயர் எடுக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மகிஷா ரமேஷ் குமார் தெற்கு காவல் துணை ஆணையர் நாகராஜன் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment