10 கோடி மதிப்புள்ள அரசாங்க இடம் ஆக்கிரமிக்கப்பட்டதாக சமூக ஆர்வலர் புகார்.அதிகாரிகள் ஆய்வு !
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 2 வது மண்டலம் 8 வது வார்டு திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள தொட்டிப்பாளையம் கிராமத்தில் போயம்பாளையம் பிரிவு நால்ரோடு வடபுரம் பழனிச்சாமி நகர் பகுதியிலுள்ள அரசிற்கு சொந்தமான இடம் க. ச எண் 295/A ல் உள்ள சுமார் ரூ10 கோடி மதிப்புள்ள (76 சென்ட்) முக்கால் ஏக்கா் நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்களுடன் நேரிடையாக புகார் மனு அளித்திருந்தார்.
இந்த புகாரின் எதிரொலியாக தற்போது திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள வருவாய் துறை ஆய்வாளர், தொட்டிப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் பழனிச்சாமி நகர் பகுதியிலுள்ள அரசிற்கு சொந்தமான இடம் க. ச எண் 295/A ல் உள்ள இடத்தை சிலர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை நேரிடையாக கள ஆய்வு செய்து வருகின்றனர்.
புகார் அளிக்கப்பட்டவுடன் விரைவாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசிற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும், வடக்கு வருவாய் துறையினர்களுக்கும் சமூக ஆர்வலர் இபி.சரவணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை இப்பகுதிகளிலுள்ள பொது மக்கள் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment