இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி மன்னார்குடி மண்டலம் அனுப்பர்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் தேசிய கொடி ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரிய பெருமக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகி வடக்கு மாவட்ட விவசாய அணி திமுக நிர்வாகிகளுமான
மு. ரத்தினசாமி அவர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வேலுச்சாமி, பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு, கஜேந்திரன் மற்றும் 14வது வட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முன்பாக நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment