திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக தெற்கு மாவட்ட இலக்கிய அணி மற்றும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை இணைந்து நடத்திய கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி மற்றும் கவிதைகள் ஒப்புவித்தல் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்காக தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்டது. இப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்பதற்காக உடுமலை, மூலனூர் குண்டடம் தாராபுரம் வெள்ளகோயில் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த பள்ளிகள் கல்லூரிகளில் பயின்று வரும் 1100 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்,
திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல. பத்மநாபன் தலைமையில், தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ். வி. செந்தில் குமார் நகரக் செயலாளர் முருகானந்தம் நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ சாமிநாதன் பேச்சுப்போட்டி பாட்டு போட்டி கவிதை ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் கலைஞரின் பேனா போல் வடிவமைக்கப்பட்ட வெற்றி கேடயங்களையும் வழங்கினார்.
No comments:
Post a Comment