திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் அலங்கியத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இஸ்லாமிய குடும்பங்கள் 50க்கும் மேற்பட்டோர் குடியிருக்க வீடு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை சந்தித்து கோரிக்கை வைத்ததின் பேரில் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல் தலைமையில் ஜெய் பீம் அழகர் முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் திரண்டு சம்பந்தப்பட்ட அலங்கியம் நில வருவாய் அதிகாரிகளிடம் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி இன்று 16.8.2024 ம் தேதி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இரா. வீராச்சாமி மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சமூக சேவகர் சிவசங்கர் உடன் இருந்தனர். கோரிக்கை மனுவை பெற்ற அதிகாரிகள் உடனடியாக விசாரணை செய்து இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
No comments:
Post a Comment