திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம் தேவனம்பாளையம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தொடக்கமாக மின்வாரியத்தில் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்த முத்துசாமி, சக்திவேல் ஆகியோருக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊத்துக்குளி ஒன்றிய சேர்மன் பிரேமா ஈஸ்வரமூர்த்தி தலைமையில் மின் இணைப்பு வழங்கபட்டது. மேலும், வருவாய் துறையில் சின்னசாமி, ஆண்டவர் என்பவர் நில ஆக்கிரமிப்பு நீக்க வேண்டி மனு அளித்தார்கள். இதில் 16 வேலம்பாளையம் ஊராட்சி, கணபதிபாளையம் ஊராட்சி, செட்டிகுட்டை ஊராட்சி, வெள்ளிரவெளி ஊராட்சி, சின்னியம்பாளையம் ஊராட்சி, ஆகிய பஞ்சாயத்து பொது மக்கள் பலர் மனு அளித்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் , வருவாய் துறை பணியாளர்கள் , அனைத்து அரசு துறைகளும் , பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமை ஊத்துக்குளி ஒன்றியம் சார்பாக சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும்
மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment