திமுக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தியபடி, திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம் எல் ஏ அவர்களின் ஆலோசனைப்படி திருப்பூர் தெற்கு மாநகரம், வாலிபாளையம் பகுதி திமுகழகத்திற்கு உட்பட்ட 51-வது வட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் பல்லடம் ரோடு ரமணாஸ் மஹாலில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் வட்ட கழகத்துக்கு உட்பட்ட மாவட்ட, மாநகர,பகுதி வட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment