திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.கழகத்தின் சார்பில் "பொங்கலூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்" உகாயனூர் பகுதியில் நடைபெற்றது.
நாடாளுமன்றத் தேர்தலில், கோவை தொகுதியிலே அதிக வாக்குகள் பெற்ற பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் ஒற்றுமையோடு பணியாற்றிய அனைத்து பொது உறுப்பினர்களுக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.செல்வராஜ் அவர்கள் அன்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேலும், அடுத்தடுத்து நடைபெற இருக்கின்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் & 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர் வெற்றியை பதிவு செய்திடும் வகையில் அனைவரும் முழுமூச்சாக பணியாற்றி மீண்டும் பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.கழகத்தின் வெற்றியை நிலைநாட்டிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில், மாநகர அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் பாலுசாமி, அசோகன், மாவட்ட துணைச் செயலாளர் பொங்கலூர் தலைவர் வக்கீல் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் கனகராஜ், ஒன்றிய அவைத் தலைவர் சண்முகம், துணைச் செயலாளர் நாச்சிமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் பாலகிருஷ்ணன், சண்முகம் உள்ளிட்ட பொங்கலூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகளும், வடக்கு மாவட்ட நிர்வாகிகளும் & கழக உடன்பிறப்புகளும் திரளாக பங்கேற்றனர்.
No comments:
Post a Comment