என்.ஆர்.கே.என் பள்ளியில் விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 September 2024

என்.ஆர்.கே.என் பள்ளியில் விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளி அருகே உள்ள  என். ஆர்.கே.என் பள்ளி மாணவர்கள் அவினாசி குறுமைய அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.             இதில் 17 வயது பிரிவில்  மாணவர்கள் எறிபந்து போட்டியில் 2 ஆம் இடம் பெற்று வெற்றி பெற்றனர்.  


 14 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் கால்பந்து, பூப்பந்து, கேரம் ஆகிய விளையாட்டில் 2 ஆம் இடம் பெற்று வெற்றி பெற்றனர்.   

600 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 3 ஆம் இடம் பெற்று இப்பள்ளி வெற்றி   பெற்றது.   

வெற்றி பெற்ற மாணவர்களை இப்பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரிய பெருமக்கள் , உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி சார்ந்தோர் மாணவர்களை  ஊக்கம் அளித்து , பாராட்டி  பரிசு மற்றும் கேடயம்  வழங்கினர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad