தாராபுரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 October 2024

தாராபுரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அதன் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாராபுரத்தின் நகர பொறுப்பாளர்களாக நகர செயலாளர் தாரை யாசின், தலைவராக பைசல், பொருளாளராக ஷாகுல் ஹமீது ,ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் மாற்று அணியிலிருந்து ஏராளமான இளைஞர்கள் மனித நேய ஜனநாயக கட்சியில் இணைந்தார்கள். இக்கூட்டத்தில் வருகிற காலத்தில் கட்சிக்கு உறுப்பினர் சேர்த்துவது தாராபுரம் நகர பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில் மனிதநேய சமூக நீதி பாசறை மாநில செயலாளர் ரமேஷ் தேவர், மாநிலச் செயலாளர் கோவை ஜாபர்,திருப்பூர் ஜாகீர்,மனித உரிமை மாநில செயலாளர் திருப்பூர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad