திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழகத்தின் 75 ஆம் ஆண்டு பவள விழா மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதல்வராக பரிந்துரை செய்த கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை போற்றும் விதமாக முப்பெரும் விழாவாக ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மாவட்டத் தலைவர் திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் என்.எஸ்.கே.சிவக்குமார் அறிவுறுத்தலின்படி தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொளத்துப்பாளையம் பேரூராட்சி நற்பணி மன்றம் சார்பாக உடையார் குளம் பகுதியில் 3000 பனை விதை நடவு மற்றும் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை பொருளாளர் ஈஸ்வரன், தொகுதி பொறுப்பாளர் மணிவாசகம், கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் முருகேசன்,பொருளாளர் சுப்பையன், துணைப் பொருளாளர் சுப்பிரமணி, கிளைத் தலைவர் காளிதாஸ், சின்னப்பன்,மூர்த்தி, பழனிச்சாமி, மகுடீஸ்வரன்,கருப்புசாமி, அண்ணாதுரை,தண்டபாணி, பிரபு,செல்வம், ராசு,மணி, கருங்காலி வலசு தன்னார்வலர் மாணவர் தர்ஷன்,ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment