தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதை முன்னிட்டு திருப்பூர் மாநகரம் அனுப்பர்பாளையம் பகுதிகளில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிகழ்வில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளரும், பதினான்காவது வார்டு செயலாளருமான மு. ரத்தினசாமி அவர்களுக்கு பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு அவர்கள் இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார் இந்த நிகழ்வில்
பாத்திர சங்க தலைவர் வேலுச்சாமி, வடக்கு மாநகர மகளிர் அணி அமைப்பாளர் கௌரி, பகுதி கழக துணை செயலாளர் மணிமாறன் , இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரன், வட்ட துணை கழக செயலாளர் கஜேந்திரன் மீனவரணி ஆறுச்சாமி , கட்டிட தொழிற்சங்க பூபதி மற்றும் 14 வது வட்ட திமுக அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment