திருப்பூர் மாநகராட்சி பாண்டியன் நகர் பகுதி இரண்டாவது வார்டு சத்யா நகரில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள நியாய விலை கடையை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டது.
இந்த நியாயவிலை கடையை மக்கள் பயன்பாட்டிற்காக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்
தோழர் கே. சுப்பராயன் எம்பி அவர்களும், மரியாதைக்குரிய திருப்பூர் மாநகர மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள்.
இந்த நிகழ்வில் மண்டல தலைவர் கோவிந்தராஜ் , மாமன்ற உறுப்பினர் மாலதி கேபிள் ராஜ், மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment