திருப்பூர் மாவட்ட உள்ளாட்சி ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் திருப்பூர் மாநகராட்சி மற்றும் ஆறு நகராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், குப்பை வாகன ஓட்டிகளுக்கும் தீபாவளிக்கு இன்னும் ஆறு நாட்கள் உள்ள நிலையில் போனஸ் வழங்காததால் திருப்பூர் மாநகராட்சி மற்றும் ஆறு நகராட்சிகளின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருப்பூர் மாநகராட்சி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில சம்மேளன குழு உறுப்பினர் தோழர் சங்கர் குமார் தலைமை வகித்தார்.
சி ஐ டி யு மாவட்ட தலைவர் தோழர் மூர்த்தி, சிஐடியு மாவட்ட செயலாளர் உள்ளாட்சி மற்றும் ஊரகத்துறை சங்க மாவட்ட செயலாளர் தோழர் ரங்கராஜ், மாவட்ட துணை தலைவர் தோழர் உண்ணிகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் திருப்பூர் மாநகராட்சி மற்றும் ஆறு நகராட்சிகளை கண்டித்தும் உடனடியாக தீபாவளி போனஸ் வழங்க கோரி யும் கண்டன உரையாற்றினார்கள். இதில் தூய்மை பணியாளர்கள் மற்றும் குப்பை வாகன ஓட்டிகள், குடிநீர் பணியாளர்கள், தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு திருப்பூர் மாநகராட்சி நகராட்சிகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment