திருப்பூரில் தமிழ் நாடு அரசு சார்பில் ஏழ்மையான மணமக்களுக்கு தங்கம், சீர்வரிசையுடன் திருமணம் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின் தங்கிய 31 இணையர்களுக்கு, தாலிக்கு 4 கிராம்
தங்கம் 60,000 மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களுடன், சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருமணம் நடத்தி வைத்து சிறப்பித்தார்.
அதை தொடர்ந்து,திருப்பூர் அருள்மிகு அவிநாசிலிங்கேசுவார் திருக்கோயில், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, திருக்கோயில்கள் சார்பில் பதின்மூன்று ஜோடி மணமக்களுக்கு திருமண விழா நடைபெற்றது,
நிகழ்வில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , மாண்புமிகு தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர்
கிறிஸ்துராஜ் , மேயர் ந.தினேஸ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்க வளர்க என்று வாழ்த்தினர்.
திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment