திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குளத்துப்பாளையம் பேரூராட்சி கருங்காலி வலசு கிராமத்தில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக மூன்றாவது ஆண்டை முன்னிட்டு, இன்று ராமபட்டினம் கிராமத்தில்,
திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் என்.எஸ்.கே.சிவகுமார் ஆலோசனையின்படி திமுக கழக இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் ஒன்றியம் கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைமை நற்பணி மன்றம் சார்பாக ஐந்தாவது வார்டு ராமபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அசோக மரம்,தைல மரம்,தேக்கு மரம், புங்கை மரம், வேம்பு மரம் என பல்வேறு ரக சுமார் 47 மரக்கன்று நடப்பட்டு, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட துணை பொருளாளர் கே.எஸ்.ஈஸ்வரன் தாராபுரம் சட்டமன்ற பொறுப்பாளர் மணிவாசகம் மன்ற பேரூராட்சி தலைவர் முருகேசன், ஒன்றிய துணைத் தலைவர் சென்னியப்பன், நல்லாம்பாளையம் ஊராட்சி பொறுப்பாளர் உதயகுமார், அம்பேத்கார் நகர் இனியவன் ரகுபதி, இனியவன், கரையூர் காளிதாஸ்,கருப்புசாமி,குப்புசாமி ராசு, துளசி மணி, மகுடி, கார்த்தி, மற்றும் கிளை பொறுப்பாளர்கள் சுப்பிரமணி, மகுடீஸ்வரன், குணசேகரன், சதீஷ்குமார், பாலகுமார், கருப்புசாமி, பழனியாண்டி மற்றும் மன்ற நிர்வாகிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சி அனைத்தும் பேரூராட்சி மன்ற பொருளாளர் சுப்பையன் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
No comments:
Post a Comment