திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், செங்கப்பள்ளி ஊராட்சி, நீலாக்கவுண்டம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியின் கீழ் நீலாக்கவுண்டம்பாளையம் ஜேவிபி நகரில் உள்ள பிரதான வீதி மண்சாலையை தார்சாலையாக அமைக்கும் பணி மற்றும் நீலாக்கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி முதல் சென்னிமலைபாளையம் புது காலனி செல்லும் சாலையை தார் சாலையாக பலப்படுத்தும் பணிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.
உடன் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் அவர்கள், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி பிரேமா ஈஸ்வரமூர்த்தி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment