தமிழ் நாடு அரசு அறிவித்துள்ள தொகுப்பு ஊதியம் மூவாயிரம் ரூபாயில், சமையல்உதவியாளர் நியமன அரசாணை எண் 95 ஐ ரத்து செய்ய வேண்டும் என,
மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, சத்துணவு ஊழியர்கள் 100 க்கு மேற்பட்டோர் பெருந்திரளாய் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் கு.விஜயராணி தலைமையில் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் விளக்கவுரையாக ஒன்றிய செயலாளர் ரா.நிர்மலா பேசினார்.
மாவட்ட செயலாளர் டி.மாசிலாமணி கண்டன நிறைவுரையாற்றினார்.
ஒன்றிய துணைதலைவர் வே.சடையப்பன் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment