நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் தங்களது பகுதியில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினர். அந்த வகையில் திருப்பூர் வடக்கு, தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி திருப்பூர் தொகுதி மாநகரம், நகரம், ஒன்றிய கிளைகளில் இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு பகுதியில் நிர்வாகிகள் வழிகாட்டுதலோடு பிச்சம்பாளையம், போயம் பாளையம், பாண்டியன் நகர், பெருமாநல்லூர், தட்டான் குட்டை, வளையங்காடு, அம்மன் நகர், தோட்டத்து பாளையம், கூத்தம்பாளையம், அண்ணா நகர், வேலம்பாளையம், அங்கேரி பாளையம், கொங்கு மெயின் ரோடு, பள்ளிபாளையம், கொடிக்கம்பம், உள்ளிட்ட பகுதிகளில் மாநில, மாவட்ட,மாநகர, நகர, ஒன்றிய, பாசறை, மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினர் இந்த முகாமில் பொதுமக்கள், இளைஞர்கள், மகளிர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இயற்கை வளம் காக்க, மண் வளம் காக்க, மனித வளம் காக்க மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மரக்கன்றுகளை ஆர்வத்துடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment