அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் கல்லூரி மாணவிக்கு நடந்த பயங்கர பாலியல் வன்கொடுமையை கண்டித்தும்,உண்மை குற்றவாளியை கைது செய்ய தயங்கும் திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக சார்பில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்
வி.பொள்ளாச்சி ஜெயராமன் எம் எல் ஏ., அவர்களது தலைமையிலும் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர், மற்றும் ஒன்றிய கழகத்தின் செயலாளருமான
கே.என். விஜயகுமார் எம் எல் ஏ., அவர்களது முன்னிலையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அஇஅதிமுகவினர் திரளாக கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். காவல் துறையினர் அனைவரையும் கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்றனர். காவல்துறை வாகனத்தில் அனுப்பர்பாளையம் பாத்திர கூட்டுறவு சங்கத்தின்(EX) தலைவர்
கே.குணசேகரன் மற்றும் 10 வது வார்டு நிர்வாகிகள் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment