திருப்பூர் திமுக வேட்பாளர் தினேஷ்குமாரிடம் (AIALS) சங்க தலைவர் ஜிகே விவசாய மணி ஆதரவு கடிதம் கொடுத்தார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 10 April 2026

திருப்பூர் திமுக வேட்பாளர் தினேஷ்குமாரிடம் (AIALS) சங்க தலைவர் ஜிகே விவசாய மணி ஆதரவு கடிதம் கொடுத்தார்


அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி நடைபெற உள்ள சட்டமன்றத் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவு தருவது என்று சங்க நிறுவனத் தலைவர் ஜி கே விவசாய மணி (எ) ஜி சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தலைவர் மற்றும் நிர்வாகிகள் முடிவெடுத்த நிலையில் அதனால் தேர்தல் களப்பணியில் வெற்றி வேட்பாளர்களுடன் சேர்ந்து ஆங்காங்கே உள்ள சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் களப்பணி செய்வது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதன்படி தீர்மான நகலை அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி கே விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணியம் அவர்கள் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் தினேஷ் குமார் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை கொடுத்தார் உடன் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad