நம்மாழ்வார் பிறந்தநாள் விழா தலைவர் ஜி கே விவசாய மணி தலைமையில் மலர் அஞ்சலி - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 April 2026

நம்மாழ்வார் பிறந்தநாள் விழா தலைவர் ஜி கே விவசாய மணி தலைமையில் மலர் அஞ்சலி



 அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் 88 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவருடைய திருவுருவப் படத்திற்கு நிறுவனத் தலைவர் திரு.G.K.விவசாயமணி (எ) G. சுப்பிரமணியம் அவர்கள் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பின்பு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள் விழாவை தலைவர் ஜி கே விவசாய மணி அவர்கள் தலைமையில் ஆண்டுதோறும் மிகப் பிரமாண்டமாக அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்க தலைமைச் செயலகத்தில் கொண்டாடப்படும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடித்து குறைந்த அளவு நிர்வாகிகள் கலந்துகொண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடினர் அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் கிளைகளில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் 88 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

மாவட்ட செய்தியாளர் அ. காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad