மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைவர் ஜி.கே.விவசாயமணி ஆதரவு - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 April 2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைவர் ஜி.கே.விவசாயமணி ஆதரவு


அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே. விவசாயமணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகளின் சிறப்பு கலந்தாய்வு கூட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது சங்க நிறுவன தலைவர் ஜி கே விவசாய மணி என்கின்ற ஜி சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் இயங்கும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சங்கமான அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளின் ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில் ஏப்ரல் 23 அன்று தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சங்கத்தின் ஆதரவு நிலைப்பாட்டினை கடிதங்கள் வாயிலாக சமர்ப்பித்தல் நடைபெற்று வருகிறது அந்த வகையில் நிறுவனத் தலைவர் ஜி கே விவசாய மணி என்கின்ற ஜி சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த மூன்றாம் தேதி  சங்கத்தின் மாநில இயற்கை வேளாண்மை பிரிவு தலைவர் முத்துசாமி தலைமை நிலைய செயலாளர் நாகேந்திரன் திருப்பூர் ஒண்ணாவது மண்டல மகளிர் அணி தலைவி வீரலட்சுமி ஆகியோர் தலைமையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மற்றும் திமுக பொறுப்பாளர் டி கே எஸ் இளங்கோவன் ஆகியோரை நேரில் சந்தித்து ஆதரவு கடிதங்களையும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலம் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவையும் கொடுத்தனர். முன்னதாக அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளை திமுக  அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்

செய்தியாளர் மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad