திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர்ப்புற பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட பயணிகள் ஆட்டோ செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தாராபுரம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பொது நல சங்கம் சார்பாக மாபெரும் ஆட்டோ பேரனை நடைபெற்றது இதில் சங்கத் கௌரவ தலைவர் சையது நசுருதீன் தலைமையில், கௌரவ தலைவர் வழக்கறிஞர் எஸ்.டி சேகர் முன்னிலையில் ஆட்டோ பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணையானது ஐந்து முக்கு பேரணி துவங்கி பெரிய கடை வீதி பூக்கடை மக்கு சந்திப்பு அமராவதி சிலை ரவுண்டானா வழியாக பேருந்து நிலையம் சென்று மீண்டும் அதே வழியாக புறவழி சாலையில் அமைந்துள்ள அழகு நாச்சியம்மன் திருமண மண்டபத்தில் வந்தடைந்தது அதன் பின்னர் சிறப்பு அழைப்பாளராக தாராபுரம் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு இது குறித்து பேசுகையில் ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டாயமாக சீருடை அணிந்திருக்க வேண்டும் பேட்ச் இல்லாமல் ஆட்டோ இயக்கக் கூடாது இரவு பகலாக ஆட்டோ ஓட்டி பொதுமக்களை பாதுகாப்பாக அழைத்து செல்கிறீர்கள், இது அனைத்தும் பொதுமக்கள் இடையே நல்ல மதிப்பு பெற்றுள்ளனர். எந்த இடத்திலும் குற்றம் மற்றும் நல்ல நிகழ்வு நடந்தால் முதல் ஆளாக முன்னிலைப்படுத்தி நிற்கிறீர்கள். ஆகவே எப்போது எங்கு எந்த விதமான நிகழ்வுகள் நடந்தாலும் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கவும் அதன் பின்னர் அனைத்து ஓட்டுநர்களுக்கும் சங்கம் சார்பாக சீருடைகள் புதிதாக சேர்ந்துள்ள சங்க உறுப்பினர்களுக்கு பேட்ச் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் புதிய ஆட்டோ ஓட்டுநர் திருமதி முருகாத்தாள் இணைந்ததற்கு பொன்னாடை வழங்கி கௌரவப்படுத்தினர். மேலும் சங்கம் சார்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் கேஸ் போன்ற எரி பொருட்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும், தமிழகம் முழுவதும் ஆட்டோ பொருத்தப்பட்டுள்ள மீட்டர் கட்டண உயர்வை சராசரியாக உயர்த்த கோரி மாநில அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது,
ஆட்டோ வாகன உதிரி பாகங்களை விலை உயர்வு மற்றும் சேவை வரிகளை உயர்த்தும்போது இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்..

No comments:
Post a Comment