அனுப்பர்பாளையம் பத்தாவது வார்டில் குடிநீர் குழாய் பணிகள் கவுன்சிலர் பிரேமலதா கோட்டா பாலு ஆய்வு - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 May 2026

அனுப்பர்பாளையம் பத்தாவது வார்டில் குடிநீர் குழாய் பணிகள் கவுன்சிலர் பிரேமலதா கோட்டா பாலு ஆய்வு


 திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் பத்தாவது வார்டு கோகுலம் காலனி செல்லும் வீதியில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணி நடைபெற்றது இந்த பணிகளை திருப்பூர் மாநகராட்சி 10 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு அவர்கள் ஆய்வு செய்தார் அங்கு பணிகளை செய்து கொண்டிருந்தவர்களிடம்  பணிகளை தரமாக செய்து தர கோரிக்கை விடுத்தார் திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் பத்தாவது வார்டை பொறுத்தவரை தெருவிளக்குகள் சாக்கடை பணிகள் மழை நீர் வடிகால் பணிகள் மற்றும் சாலை பணிகள் குடிநீர் குழாய்கள் உடைப்பு பணிகள் என தொடர்ந்து தினசரி நேரடியாக வார்டு முழுவதும் அவர் கண்காணித்து வருகிறார் பத்தாவது வார்டு பொதுமக்கள் மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டாபாலு அவர்களை எந்த நேரத்திலும் நேரில் சந்திக்கலாம் கைபேசி மூலம் புகார்களை தெரிவிக்கலாம் புகார்கள் உடனுக்குடன்  மண்டல அலுவலகத்தில் தெரிவித்து சரி செய்து கொடுத்து விடுவார் இவ்வாறு பத்தாவது வார்டு பொதுமக்கள் நம்மிடம் தெரிவித்தனர்

 மாவட்ட செய்தியாளர்

அ. காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad