திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நரசிங்காபுரம் பேருந்து நிறுத்த கட்டடத்திற்கு அடியில் உள்ள குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.
இதில் கொடுமை என்ன என்றால் குடிநீர் குழாய்கள் செல்லும் இடத்தில் பேருந்து நிறுத்தம் கட்டிய துறை சார்ந்த அலுவலர்களை என்னவென்று சொல்வது பொறியாளர்கள் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர் இது மை வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும் உடனடியாக இந்த இந்த தண்ணீர் குழாய்களை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் தண்ணீர் குழாய்களுக்கு மேல் கட்டப்பட்ட இந்தப் பேருந்து நிறுத்த கட்டிடம் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ சி மகேந்திரன் அவர்கள் நிதியிலிருந்து கட்டப்பட்டதாகும் மகேந்திரன் எம்எல்ஏவும் அதிகாரிகளும் இந்த பேருந்து நிறுத்தம் கட்டும் பொழுது ஆய்வு செய்யவில்லை என்றே தெரிகிறது பொறுப்பில்லாமல் வேலை செய்தால் இப்படித்தான் நடக்கும் என்று பொதுமக்கள் குறை கூறுகின்றனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment