தாராபுரம், ஜூலை 27: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு நாள் பழைய நகராட்சி அண்ணா சிலை அருகில் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை தலைவர் அபுதாஹிர் தலைமை வகித்தார். டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி அவரது நாட்டுப்பற்றும், அறிவியல் வளர்ச்சிக்கான பங்களிப்பும், இளைஞர்களுக்கான ஊக்கமூட்டும் சிந்தனைகளும் நினைவுகூரப்பட்டன.
இந்நிகழ்வில் துணைத் தலைவர் அப்பாஸ், செயலாளர் சண்முகம்,பொருளாளர் ஆறுச்சாமி, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தென்னரசு, முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் கோவிந்தராஜன், சமூக ஆர்வலர் ஜாபர் சாதிக், டாக்டர் ஜெய்லானி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாரகு, கவுண்டச்சி புதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், தமிழ் கலை மன்றம் சண்முகம், தண்டபாணி, போஸ்ட்மேன் சுப்பிரமணி, நகராட்சி சமூக ஆர்வலர்கள் சுமதி லதா, ராஜேஷ், நாட்டுதுரை, முத்தரசன், நாகராஜ், சிலம்பரசன், ஒண்டிவீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அப்துல் கலாம் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment