திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று திருநங்கைகளுக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது இதுபற்றி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே விடுத்துள்ள அறிக்கையில் திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மாதம் தோறும் முதல் வெள்ளிக்கிழமை திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் முகாம் வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது இதில் திருநங்கைகள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மனுக்களாக கொடுத்து தீர்வு காணும் படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே அறிவித்துள்ளார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment