தாராபுரத்தில் 'ஜனநாயகன்' திரைப்பட வெளியீடு: ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 July 2026

தாராபுரத்தில் 'ஜனநாயகன்' திரைப்பட வெளியீடு: ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்

தாராபுரத்தில் 'ஜனநாயகன்' திரைப்பட வெளியீடு: ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்

தாராபுரம், திருப்பூர் மாவட்டம்: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியதை முன்னிட்டு, தாராபுரத்தில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

தாராபுரம் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் கே.எஸ். கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில், பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் பரீத்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா, நகரச் செயலாளர்கள் கதிர், அபுதாஹிர், முன்னாள் நகரத் தலைவர் எஸ்.ஜாபர் சாதிக், கழக நிர்வாகிகள் ஆட்டோ முஜி, பாவா, நல்லசாமி, தில்லைமுத்து, கார்த்தி, நவநீதன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் ரசிகர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் நடித்த இறுதித் திரைப்படம் என்ற சிறப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, தாராபுரத்தில் நடைபெற்ற இந்த உற்சாகமான கொண்டாட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad