தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழக வெற்றி கழக தென்கிழக்கு மாவட்ட செயலாளர் சத்தியபாமா, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கினார்.
தாராபுரம் 22-வது வார்டு முத்துநகரில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கிய சத்தியபாமா, அப்பகுதி பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது பொதுமக்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையான மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த சத்தியபாமா, அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பொள்ளாச்சி ரோடு, செட்டியார் தோட்டம் மற்றும் ஆதிதிராவிடர் காலனி பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
இதையடுத்து ஆசா நகர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து சத்தியபாமா கலந்துரையாடினார். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு, அவர்களின் கோரிக்கைகளை அறிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 22-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் நாகராஜன், நகர செயலாளர் அபுதாஹிர், கதிர், முன்னாள் நகரத் தலைவர் ஜாபர் சாதிக், தொழிலாளர் அணி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் ஜாபர்சாதிக்
No comments:
Post a Comment