திருப்பூர் கிராம பகுதியில் பள்ளி மாணவர்கள் கைகாட்டியும் நிற்காமல் சென்ற பத்தாம் நம்பர் அரசு பேருந்து - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 August 2026

திருப்பூர் கிராம பகுதியில் பள்ளி மாணவர்கள் கைகாட்டியும் நிற்காமல் சென்ற பத்தாம் நம்பர் அரசு பேருந்து


திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் இருந்து ஆதியூர் மற்றும் பெருமாநல்லூர் வழித்தடத்தில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் செல்லும் பத்தாம் நம்பர் பேருந்து அவ்வழியில் உள்ள அம்மாபாளையம் மற்றும் ரைஸ் மில் பஸ் ஸ்டாப் பகுதிகளில் அடிக்கடி நிறுத்தாமல் சென்று விடுகின்றனர் இதனால் அப்பகுதியின் இருந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளிகள் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் ஆகவே இதுபோல பஸ் பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மீது சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அடுத்த பேருந்து வந்தால் மட்டுமே பள்ளிக்கு குழந்தைகள் செல்ல முடியும் அதுவரை காலதாமதம் ஆகும் இது ஓட்டுனர்களுக்கு நடத்துனர்களுக்கு தெரியாதா வேண்டுமென்றே இலவசமாக செல்பவர்களை தவிர்த்து செல்கின்றார்களா என்று இந்த பகுதி மாணவ மாணவியர்கள் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் பள்ளிக்கு செல்ல காத்திருந்த மாணவன் மாணவியர்கள் மிகவும் அவதி 

படுகின்றனர் வேலைக்கு செல்லும் பெண்கள் நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது அடுத்த பேருந்து வரும் வரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது இதெல்லாம் ஓட்டுநர் நடத்துனர்களுக்கு தெரியாதா வேண்டுமென்றே பேருந்து நிறுத்தாமல் செல்கின்றனரா இது பற்றி போக்குவரத்து துறை ஆய்வு நடத்தி அறிவுறுத்தல் செய்ய வேண்டும் இது போன்றவர்களை பணி இறக்கம் செய்துவிட்டு எத்தனையோ இளைஞர்கள் இந்த பணிகளுக்காக காத்திருக்கின்றனர் அவர்களுக்கு அரசு உரிய முறையில் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்த வேண்டும் பள்ளி மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் தமிழ்நாடு அரசு உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad